நிலவைச் சுற்றிய வரலாற்றுப் பயணம் நிறைவு - பசுபிக் கடலில் (ஸ்பிளாஷ்டவுன்) செய்த ஓரியன் விண்கலம்
50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவில் மனிதன் கால் பதிப்பது ஒரு கனவாகவே இருந்து வந்த நிலையில், அந்தக் கனவை நனவாக்கும் முதல் படியை நாசா (NASA) இன்று வெற்றிகரமாக எட்டியுள்ளது. நிலவை நோக்கிப் பயணம் மேற்கொண்ட ஆர்ட்டெமிஸ் "II" (Artemis II) விண்கலம், தனது 10 நாள் விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று அதிகாலை விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது.
சாதனைப் பயணத்தின் முக்கியத் தகவல்கள்
10 நாட்கள் நிலவைச் சுற்றிய சாதனைநாசாவின் அதீத தொழில்நுட்பத்தில் உருவான இந்த விண்கலம், கடந்த 10 நாட்களாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்தது. 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2026 நிலவுக்கு மிக அருகில் சென்று அங்கிருந்து நேரடித் தரவுகளைச் சேகரித்த முதல் மனிதப் பயணம் இதுவாகும். விண்வெளி வீரர்கள் நிலவின் மேற்பரப்பை மிக அருகில் இருந்து ஆய்வு செய்துள்ளனர்.
பாதுகாப்பான தரையிறக்கம் (ஸ்பிளாஷ்டவுன்)
பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது ஏற்படும் அதீத வெப்பத்தைத் தாங்கி, பாராசூட்டுகள் குடைபோல விரிய, விண்கலம் இன்று அதிகாலை 'பசுபிக் பெருங்கடலில்' அமைதியாகத் தரை இறங்கியது. தயார் நிலையில் இருந்த மீட்புக் குழுவினர், விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக மீட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
செவ்வாய் கிரகத்திற்கு இதுதான் வாசல்
ஆர்ட்டெமிஸ் "II" திட்டத்தின் வெற்றி என்பது வெறும் நிலவுப் பயணம் மட்டுமல்ல; இது அடுத்து வரவிருக்கும் ஆர்ட்டெமிஸ் “III” திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் மனிதர்களை இறக்குவதற்கான முன்னோட்டம். நிலவில் மனிதர்கள் தங்குவதற்கான வசதிகளை உருவாக்குவதும், அதன் மூலம் செவ்வாய் கிரகப் பயணத்திற்குத் தயாராவதும் தான் இதன் உண்மையான நோக்கம்.
1. இந்த வெற்றியின் சிறப்பம்சங்கள்
தொழில்நுட்ப விஸ்வரூபம் உலகின் சக்திவாய்ந்த S L S ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தின் அபாரமான செயல்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சர்வதேச ஒத்துழைப்பு இந்த மீட்புப் பணியில் பல நாடுகளின் விண்வெளி அமைப்புகள் மற்றும் கடற்படை இணைந்து செயல்பட்டது ஒரு மெகா ராஜதந்திர வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்துக்கள்