வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள்

KO
Kobika
in இலங்கை
Friday, 26 June, 2026 - 11:03 AM 166 Views

"விளையாட்டால் படிப்பு பாதிக்கப்படும்", "சான்றிதழ் மட்டும் வைத்து என்ன பயன்?" போன்ற கருத்துகள் இன்னும் பல பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் நிலவுகின்றன. ஆனால், விளையாட்டின் உண்மையான நோக்கம் வெற்றிக்கோப்பைகள் அல்லது பதக்கங்கள் மட்டுமல்ல.

படிப்பையும் விளையாட்டையும் சமநிலைப்படுத்தி முன்னேறுவது ஒரு முக்கியமான வாழ்க்கைத்திறன். அதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும். சில நேரங்களில் திட்டமிடப்படாத பயிற்சிகள், இடைவிடாத பிரத்தியேக வகுப்புகள், வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட அணுகுமுறைகள் போன்றவை இந்த சமநிலையை பாதிக்கின்றன.

ஆனால் அதனால் விளையாட்டின் மதிப்பு குறையாது.

2024–2025 காலப்பகுதியில் வெளியிடப்பட்ட சுகாதார ஆய்வுகள் சில கவலைக்கிடமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.

• இலங்கைப் பாடசாலை மாணவர்களில் சுமார் 18% பேர் ஏதேனும் ஒரு மனநலப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

• 22% மாணவர்கள் கடந்த ஒரு ஆண்டில் கடுமையான தனிமை உணர்வை அனுபவித்துள்ளனர்.

• 63% மாணவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையப் பயன்பாட்டால் போதிய தூக்கமின்றி வாழ்கின்றனர்.

• பதின்ம வயதினரில் 60.1% பேர் குறிப்பிடத்தக்க உளவியல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

• சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் கொண்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

• அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளும் மாணவர்களிடையே காணப்படுகின்றன.

இவற்றை விட மேலும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால்,

• 13–17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 88.1% பேர் தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் கூட உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடுவதில்லை.

• பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு தினசரி உடற்பயிற்சி செய்யும் மாணவர்கள் வெறும் 11.9% மட்டுமே.

• 43.9% மாணவர்கள் பாடசாலை நேரத்திற்கு வெளியே ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக உடலுழைப்பு இல்லாமல் அமர்ந்தோ அல்லது படுத்தோ நேரத்தை செலவிடுகின்றனர்.

இந்தப் புள்ளிவிவரங்கள் எதிர்காலத்தில் தொற்றா நோய்கள் மற்றும் மனநலச் சவால்கள் அதிகரிக்கும் அபாயத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

அன்புள்ள பெற்றோர்களே,

உங்கள் பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபட ஊக்குவியுங்கள். அது பதக்கங்களுக்காக அல்ல; ஆரோக்கியமான உடலுக்காக, உறுதியான மனதுக்காக, ஒழுக்கம், பொறுப்பு, குழு உணர்வு மற்றும் சமநிலை ஆளுமையை வளர்ப்பதற்காக.

விளையாட்டு என்பது வெறும் போட்டிக்காக அல்ல…

வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ கற்றுத்தரும் ஒரு சிறந்த பாடமாகும்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்