அச்சத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

அச்சத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம்

PI
piragash
in உலகம்-மத்திய கிழக்கு
Friday, 03 April, 2026 - 11:41 PM 3576 Views

ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களின் போக்குவரத்து கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டதால், உலகளாவிய எண்ணெய், எரிவாயு மற்றும் உர விநியோகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஆனால், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையேயான அந்தக் குறுகிய நீர்வழியைக் கடக்கக் காத்திருக்கும் 2000 கப்பல்களில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான மாலுமிகளின் நிலைமைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவிக்கையில், 

மோதல் தொடங்கியதிலிருந்து வளைகுடாவில் வர்த்தகக் கப்பல்கள் மீது 21 தாக்குதல்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களில் 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச கடல்சார் அமைப்பு IMO தெரிவித்துள்ளது.

மேலும், வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் தற்போது நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் 20,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் உள்ளனர். குறைந்துவரும் விநியோகப் பொருட்கள், சோர்வு மற்றும் கடுமையான மன அழுத்தம் ஆகியவற்றால் குழுவினர் அவதிப்படுவதாக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண, துண்டு துண்டான நடவடிக்கைகள் இனி போதுமானதாக இல்லை என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ் கூறியுள்ளார்.

கப்பல் குழுவினரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும், சிக்கித் தவிக்கும் கப்பல்கள் மற்றும் மாலுமிகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளைக் கொண்டு சேர்ப்பதற்காக மனிதாபிமான வழித்தடங்களை அமைக்க உதவுவதற்கும் அவர் இராஜதந்திர உதவியைக் கோரியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்