ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் – இருபுறமும் அமெரிக்க போர்க்கப்பல்கள், கடும் எச்சரிக்கை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
AI முதலீடுகள் உலக பொருளாதாரத்தை எப்படி மாற்றுகின்றன? 2026 உலக வணிக உலகின் முக்கிய போக்குகள் உலக வர்த்தகத்தின் எதிர்காலம்: அரசியல் பதற்றங்களையும் மீறி வளருமா? கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அதிசயங்கள் சூரிய ஆற்றல்: எதிர்காலத்தின் தூய்மையான சக்தி சித்த மருத்துவம் – தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறை சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் – இருபுறமும் அமெரிக்க போர்க்கப்பல்கள், கடும் எச்சரிக்கை

KO
Kobika
in உலகம்-மத்திய கிழக்கு
Saturday, 25 April, 2026 - 01:54 PM 94 Views

ஈரான் உடனான அமை​திப்பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் திட்​ட​மிட்டுள்​ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தற்​போது 19 போர்க்கப்பல்​கள் மத்​திய கிழக்​கில் முகாமிட்டுள்​ளதுடன், நீரிணை​யின் இரு​புறமும் அமெரிக்க போர்க்கப்பல்​கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “காலம் கடந்து சென்று கொண்​டிருக்​கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்று எச்சரித்துள்​ளார்.

மேலும் கண்​ணிவெடிகளை வீசும் ஈரான் படகு​களை சுட்டு வீழ்த்த ஜனாதிபதி ட்ரம்ப் உத்​தர​விட்டுள்​ளார் என்றும் அமெரிக்​க இராணுவ வட்டாரங்கள்​ தெரி​வித்​துள்ளன.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் உயர் தலை​வர் மோஜ் தபா கொமெய்னி நேற்று வெளியிட்ட அறிக்கை​யில், “ஈரான் தேசப்​பற்றாளர்​களின் ஒற்​றுமை​யால் எதிரிகளின் கூட்ட​ணி​யில் விரிசல் ஏற்​பட்டு இருக்​கிறது. ஈரான் மக்களின் மனதில் அச்சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்​கிறது.இதற்கு இடம் கொடுக்கக்​ கூ​டாது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்