ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
இலங்கை பொலிஸிற்கு இந்தியாவின் அன்பளிப்பு – 134 கெப் வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை – கியூபா நட்புறவை வலுப்படுத்த கலந்துரையாடல் திருகோணமலையில் 4 எண்ணெய் தாங்கிகள் புனரமைப்பு – 2 தாங்கிகள் பணிகள் நிறைவு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி முல்லைத்தீவில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வானிலை எச்சரிக்கை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை இன்றைய ராசிபலன் @ 19 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை

ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை

TN
TNT Admin
in உலகம்-மத்திய கிழக்கு
Sunday, 29 March, 2026 - 06:45 AM 57 Views

மத்திய கிழக்கு நாடுகளில் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் வேலை செய்வோரை விலகி இருக்கும்படி ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது. அமெரிக்கப் படையினருக்கு அருகே வசிப்பவர்களுக்கும் அத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு முழுதும் அமெரிக்கப் படையினர் தங்கியிருக்கும் இடங்கள், ஹோட்டல்களைக் குறிவைத்திருப்பதாக ஈரான் சொன்னது. ஈரானின் தொழில்சாலைப் பகுதிகளில் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தியதை அடுத்து எச்சரிக்கை வந்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தை நெருங்குகிறது. தற்காப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராய் இருப்பதாக வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) தாண்டிச் செல்ல முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்