முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்- கனடா | TamilNewsToday
முக்கிய செய்திகள்
மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை -புத்தக விமர்சனம் சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம்: பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்- கனடா

PI
piragash
in உலகம்-கனடா
Saturday, 04 April, 2026 - 09:45 PM 3987 Views

கனடாவின் பிரெம்ரன் நகரின் சிங்குவாகூசி பூங்காவில் உள்ள முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தில் இழிவான வாசகங்களை தீந்தைமூலம் எழுதி அதனை சேதப்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  5000 USD டொலருக்கு மேலான சேதப்படுத்தல் செலவீனம் உட்பட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட குறித்த 14 வயது சிறுவன் விரைவில் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

சிறுவன் கைது

நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதாக கிட்டிய முறையீடுகளை அடுத்து சிங்குவாகூசி பூங்காவிற்கு சென்ற காவற்துறை குறித்த சேதத்தை உறுதிசெய்ததுடன் உடனடியாக இந்த விசாரணையை வெறுப்புக் குற்றப் பிரிவிடம் ஒப்படைத்த நிலையில் விசாரணைக்குப்பின்னர் பிராம்ப்டனைச் சேர்ந்த குறித்த சிறுவன் செய்யப்பட்டிருந்தார்.

எனினும் கனடாவின் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் சிறார் சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்பதால் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்