இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை -புத்தக விமர்சனம் சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம்: பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள்

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம்

SR
Sri
in உலகம்-மத்திய கிழக்கு
Sunday, 29 March, 2026 - 09:12 AM 4640 Views

மத்திய இஸ்ரேலின் பெய்ட் ஷமேஷ் நகருக்கு அருகிலுள்ள எஷ்டாவோல் (Eshtaol) கிராமத்தின் மீது ஈரான் நடத்திய நேரடி ஏவுகணைத் தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்தத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் கிராமமொன்றின் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம் ஈரானிய ஏவுகணை நேரடியாகக் குடியிருப்பு ஒன்றின் மீது விழுந்து வெடித்ததில் அங்கு பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், ஏராளமான கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக இராணுவத்தின் 'ஹோம் ப்ரொண்ட் கமாண்ட்' (Home Front Command) தளபதி ஓஹாத் மோயல் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் நடவ் ஷோஷானி, எஷ்டாவோல் கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தின் வீடு ஈரானிய ஏவுகணையால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான காணொளி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்