செவ்வாய் ஆராய்ச்சியில் முன்னேற்றம்: நாசா விண்கலம் மூலம் புதிய கண்டுபிடிப்பு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத டி20 போட்டியில் டெல்லி வெற்றி ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெய்ஜிங்கில் சொர்க்கக் கோயிலுக்கு சென்ற ஷி ஜின்பிங் – டிரம்ப் சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 மே 2026 தாய்லாந்து அரசியலில் அதிரடி மாற்றம்: சிறையிலிருந்து விடுதலையானார் தக்சிண் ஷினாவத்ரா! இன்றைய ராசிபலன் – மே 10, 2026 ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வாக்குமூலம்!

செவ்வாய் ஆராய்ச்சியில் முன்னேற்றம்: நாசா விண்கலம் மூலம் புதிய கண்டுபிடிப்பு

KO
Kobika
in தொழில்நுட்பம்
Thursday, 23 April, 2026 - 09:31 PM 80 Views

செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருந்ததா என்பது பற்றி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தை ஆராய 2012-ல் அனுப்பப்பட்டது.

இது செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து, அங்குள்ள பாறைகளில் கரிம மூலக்கூறுகள் மற்றும் நீரின் தடயங்களை கண்டறிந்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்ந்ததற்கான புதிய ஆதாரமாக இதுவரை கண்டறியப்படாத மிகச் சிக்கலான 7 கரிம மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள பாறைகளில் உயிரினங்களின் அடிப்படையாகக் கருதப்படும் நைட்ரஜன் மற்றும் கந்தகச் சேர்மங்கள் இருப்பதை ஒரு சிறப்பு வேதியியல் பரிசோதனை வெளிப்படுத்தியுள்ளது. இது பூமியில் உள்ள R.N.A மற்றும் D.N.A க்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

இதனை விஞ்ஞானிகள் வியப்புடன் பார்வையிட்டு அடுத்தக்கட்ட ஆய்வை நோக்கி நகர்ந்துள்ளனர். இதன் மூலம் உயிர் வாழத் தேவையான வேதியியல் சூழல் அங்கு இருந்தது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்