தூய்மையான மற்றும் முடிவில்லா ஆற்றலை நோக்கி: Fusion Energy துறையில் புதிய சாதனை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

தூய்மையான மற்றும் முடிவில்லா ஆற்றலை நோக்கி: Fusion Energy துறையில் புதிய சாதனை

KO
Kobika
in தொழில்நுட்பம்
Thursday, 11 June, 2026 - 11:30 AM 62 Views

உலகளவில் அணுக்கரு இணைவு ஆற்றல் (Fusion Energy) தொடர்பான ஆராய்ச்சிகளில் முன்னணி வகிக்கும் Commonwealth Fusion Systems (CFS) நிறுவனம், தனது தொழில்நுட்பத்தின் அறிவியல் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய முன்னேற்றத்தை அறிவித்துள்ளது. இதனை ஆதரிக்கும் வகையில் வெளியிடப்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகள், எதிர்காலத்தில் Fusion தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை வலுப்படுத்தியுள்ளன.

Fusion Energy என்பது சூரியன் மற்றும் பிற நட்சத்திரங்களில் நடைபெறும் அணுக்கரு இணைவு செயல்முறையை பூமியில் செயற்கையாக உருவாக்கும் முயற்சியாகும். இந்த செயல்முறையின் மூலம் மிக அதிக அளவிலான ஆற்றலைப் பெற முடியும். அதேவேளை, இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் வாயுக்களை வெளியிடாது. மேலும், வழக்கமான அணுமின் உற்பத்தியை ஒப்பிடுகையில் நீண்டகால கதிரியக்கக் கழிவுகளும் மிகக் குறைவாக உருவாகும்.

இந்த இலக்கை அடைவதற்காக CFS நிறுவனம் தற்போது SPARC எனப்படும் பரிசோதனை Fusion அமைப்பை உருவாக்கி வருகிறது. இதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ARC எனப்படும் வணிக ரீதியிலான Fusion மின் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையம் சுமார் 400 மெகாவாட் மின்சாரத்தை தொடர்ந்து உற்பத்தி செய்து மின் வலையமைப்புக்கு வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Fusion ஆற்றல் தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராத நிலையிலிருந்தாலும், 2026 ஆம் ஆண்டில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் ஆற்றல் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. உலகின் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பூர்த்தி செய்வதற்கான நீண்டகால தீர்வாக Fusion Energy பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகளும் நிறுவனங்களும் இந்தத் துறையில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்