ஸ்மார்ட் டாட்டூ (Smart Tattoo) – புற்றுநோய் கண்டறிதலில் புதிய மருத்துவ முன்னேற்றம் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

ஸ்மார்ட் டாட்டூ (Smart Tattoo) – புற்றுநோய் கண்டறிதலில் புதிய மருத்துவ முன்னேற்றம்

KO
Kobika
in மருத்துவம்
Sunday, 31 May, 2026 - 02:06 PM 58 Views

ஸ்மார்ட் டாட்டூ (Smart Tattoo) – புற்றுநோய் கண்டறிதலில் புதிய மருத்துவ முன்னேற்றம்

கனடா மற்றும் மான்ட்ரியால் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் “ஸ்மார்ட் டாட்டூ” எனப்படும் புதிய மருத்துவ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது புற்றுநோயை, குறிப்பாக தோல் புற்றுநோய் (melanoma) ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய உதவுகிறது. இந்த ஆராய்ச்சி 2026 ஆம் ஆண்டு Nature Sensors இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த தொழில்நுட்பத்தில் “microneedles” எனப்படும் மிகச் சிறிய ஊசிகள் தோலின் மேல் வலியில்லாமல் வைக்கப்படுகின்றன. அவை nanoparticles எனப்படும் நானோ துகள்களை தோலுக்குள் செலுத்துகின்றன. இவை ஒரு “temporary intelligent tattoo” போல செயல்பட்டு, உடலின் வெப்ப மாற்றங்களை அளவிடும் மிகச் சிறிய சென்சார்களாக வேலை செய்கின்றன.

 

புற்றுநோய் செல்கள் சாதாரண செல்களைவிட அதிகமாக சக்தியை பயன்படுத்துவதால் அதிக வெப்பத்தை உருவாக்குகின்றன. இந்த வெப்ப மாற்றத்தை ஸ்மார்ட் டாட்டூ கண்டறிந்து, ஒளி சிக்னலாக மாற்றுகிறது. பின்னர் சிறப்பு imaging தொழில்நுட்பம் மூலம் மருத்தவர்கள் மிகச் சிறிய கட்டிகளையும் (tumors) ஆரம்ப நிலையில் கண்டறிய முடிகிறது. சில ஆய்வுகளில், வெறும் 4 நாட்கள் வயதுள்ள மிகச் சிறிய புற்றுநோய் செல்களையும் கண்டறிந்துள்ளனர். 

இந்த கண்டுபிடிப்பு முக்கியமாக மருத்துவ உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது புற்றுநோய் பெரும்பாலும் கண்ணால் பார்க்கக்கூடிய நிலையில் அல்லது biopsy மூலம் மட்டுமே கண்டறியப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட் டாட்டூ மூலம் தேவையற்ற biopsy குறைக்கப்பட்டு, நோயை மிக ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். எதிர்காலத்தில் இது பல்வேறு நோய்களுக்கும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்