மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் – ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் சேவை தடை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் – ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் சேவை தடை

KO
Kobika
in உலகம்-மத்திய கிழக்கு
Monday, 20 April, 2026 - 12:17 PM 121 Views

உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 20 சதவீதம் வழக்கமாக ஹோர்முஸ் நீரிணை  வழியாகவே செல்கிறது.

ஆனால் மத்திய கிழக்கில் அண்மையில் அதிகரித்துள்ள பதற்றம் காரணமாக, இந்த வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது.

GMT நேரம் மதியம் 12:00 மணிக்கு (BST 13:00) முன்பாக எடுக்கப்பட்ட Marine Traffic இணையதளத்தின் காட்சிப்படத்தின் படி, ஹோர்முஸ் நீரிணையில் எந்தக் கப்பல் போக்குவரத்தும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் வணிகக் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவித்திருந்தார். எனினும், இந்த முடிவு ஒரு நாளுக்குள் மாற்றப்பட்டது.

தற்போது,ஈரானிய துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையை (blockade) நீக்கும் வரை, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்