இஸ்ரேல் - ஈரான் டிஜிட்டல் போர்: ரகசியங்கள் அம்பலம்: உலகை அதிரவைத்த டிரம்பின் 24 மணி நேர கெடு! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
குவாண்டம் கம்பியூட்டிங் – கணினி உலகின் அடுத்த புரட்சி ஆன்மாவின் பயணம்: கற்பனையா? அறிவியல் சாத்தியமா? பேச்சு தாமதம் – பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை – ஒப்பிடாதீர்கள் மைக்ரோபிளாஸ்டிக்: நம் வாழ்க்கையில் மறைந்து இருக்கும் ஆபத்து வரலாற்றில் இன்று – மே 3 இன்றைய (மே 3, 2026) 12 ராசிகளுக்கான ராசிபலன் டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

இஸ்ரேல் - ஈரான் டிஜிட்டல் போர்: ரகசியங்கள் அம்பலம்: உலகை அதிரவைத்த டிரம்பின் 24 மணி நேர கெடு!

SU
sugatheepanOffeal
in உலகம்-மத்திய கிழக்கு
Saturday, 11 April, 2026 - 09:19 AM 3837 Views

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தற்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் இஸ்ரேலிய ராணுவத்தின் ரகசியங்கள் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இஸ்ரேலிய தளபதியின் போன் ஹேக் 19,000 ரகசியங்கள் அவுட்!
இஸ்ரேலிய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவியின் தனிப்பட்ட கைபேசி மற்றும் கணினிகளை ஈரானிய ஆதரவு பெற்ற 'Handala' ஹேக்கர் குழு ஊடுருவியுள்ளது.
என்ன திருடப்பட்டது?: ராணுவக் கூட்டங்கள், முக்கிய வரைபடங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளின் ரகசியங்கள் அடங்கிய சுமார் 19,000 வீடியோக்கள் மற்றும் கோப்புகள் திருடப்பட்டுள்ளன. அதிர்ச்சி தகவல்  தளபதி மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட அடையாள அட்டைகள், புகைப்படங்கள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளன.
உறுதிப்படுத்தப்பட்ட செய்தி: இந்தத் தகவல்கள் உண்மையானவைதான் என்பதை இஸ்ரேலியத் தரப்பு CNN ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளது. "உங்கள் ரகசிய அறைகள் இனி எங்களுக்குத் திறந்த புத்தகம்" என ஹேக்கர்கள் விடுத்த எச்சரிக்கை இஸ்ரேலிய ராணுவத்தை உறைய வைத்துள்ளது.

டிரம்பின் அதிரடி 24 மணி நேர காலக்கெடு!
ஈரான் உடனான சமாதானப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு தீர்க்கமான முடிவை அறிவித்துள்ளார். 'நியூயார்க் போஸ்ட்' இதழுக்கு அவர் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் இறுதி முடிவு: அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈரானுடன் சுமுக முடிவு எட்டப்படுமா என்பது தெரிந்துவிடும்.
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு பாகிஸ்தானில் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எச்சரிக்கை: பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், அடுத்த நிமிடம் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தாக்குதலைத் தொடங்கும். ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்காது என டிரம்ப் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
ஏவுகணைப் போரை விட இத்தகைய சைபர் தாக்குதல் ஒரு நாட்டின் பாதுகாப்பை எளிதாகச் சிதைத்துவிடுமா? ஈரானின் பிடியில் இஸ்ரேலிய ரகசியங்கள் சிக்கியது போரின் போக்கை மாற்றுமா……….?

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்