உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் பதிவாகும் அதிரடி மாற்றம் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் பதிவாகும் அதிரடி மாற்றம்

KO
Kobika
in உலகம்-மத்திய கிழக்கு
Wednesday, 22 April, 2026 - 12:57 PM 88 Views

மத்திய கிழக்கு போர் பதற்றங்களுக்கு மத்தியில் உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (22) வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.32 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 89.39 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய, இயற்கை எரிவாயுவின் விலையும் இன்று சரிவடைந்து, புதிய விலை 2.68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் எரிசக்தி கையிருப்பு தொடர்பான காரணிகளால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்