ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ விபத்து – பிரதமர் மோடி வருகை ரத்து | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ விபத்து – பிரதமர் மோடி வருகை ரத்து

RA
Raveenth@
in இந்தியா
Tuesday, 21 April, 2026 - 03:18 AM 164 Views

ராஜஸ்தானின் பாலோத்ரா (Pachpadra) பகுதியில் அமைந்துள்ள ரிஃபைனரி வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

  • இந்த தீ விபத்து Crude Distillation Unit (CDU) அருகே ஏற்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. 
  • ஹைட்ரோகார்பன் கசிவு (leakage) காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணை கூறுகிறது.

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் உள்ள பச் பத்ரா (Pachpadra) சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாகத் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் ராஜஸ்தான் அரசு இணைந்து ஒருங்கிணைந்த பச் பத்ரா சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகத்தை உருவாக்கின. இது இந்தியாவின் முதல் 'கிரீன்ஃபீல்ட்' ஒருங்கிணைந்த திட்டமாகும். 2013 அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சோனியா காந்தியால் ரூ.37,230 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. 2018-ல் நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின், பிரதமர் மோடி இத்திட்டத்தை ரூ.43,129 கோடி மதிப்பீட்டில் மறுதொடக்கம் செய்து வைத்தார்.

பிரதமர் மோடி வருகை ஏன் ரத்து?

பிரதமர் Narendra Modi அவர்கள் ஏப்ரல் 21 அன்று இந்த பெரிய திட்டத்தை திறந்து வைக்க இருந்தார் ஆனால் இந்த தீ விபத்துக்குப் பிறகு, திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது / ரத்து செய்யப்பட்டது புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்