வாக்குச்சாவடிக்குள் நுழைந்த காட்டு யானை: அச்சத்தில் ஓடிய மக்கள் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

வாக்குச்சாவடிக்குள் நுழைந்த காட்டு யானை: அச்சத்தில் ஓடிய மக்கள்

KO
Kobika
in தமிழ்நாடு
Thursday, 23 April, 2026 - 05:50 PM 133 Views

இந்தியாவின் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டமன்ற வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் காட்டு யானை புகுந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கிராம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருந்துள்ளனர். 

அப்போது திடீரென அருகிலிருந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று வாக்குச்சாவடி வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. யானையைக் கண்டதும் வரிசையில் நின்ற வாக்காளர்கள் அச்சமடைந்து நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். 

இதனால் அந்த மையத்தில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நிலைமை சீரானதைத் தொடர்ந்து, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியுள்ளது. 

இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த சட்டமன்ற தேர்தல் சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்