ட்ரம்ப் பின்வாங்கினார் – புதிய திருப்பம்! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

ட்ரம்ப் பின்வாங்கினார் – புதிய திருப்பம்!

TN
TNT Admin
in உலகம்-அமெரிக்கா
Tuesday, 24 March, 2026 - 05:55 AM 3522 Views

"டொனால்ட் ட்ரம்ப்புடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு எதுவும் இல்லை" என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஈரானிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி, இதனை குறிப்பிட்டுள்ளது. "மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் நிலையங்களும் எங்கள் இலக்குகளில் அடங்கும் என்பதைக் கேட்ட பிறகு, ட்ரம்ப் பின்வாங்கினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்காவிட்டால், திங்கட்கிழமை மாலைக்குள் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார். இந்தநிலையில் இன்று(23) ஈரானின் மின்சார மற்றும் எரிசக்தி நிலையங்களை இலக்காகக் கொண்ட இராணுவ தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்