Tamil News Today
முக்கிய செய்திகள்
புகழ்பெற்ற பாடகி Asha Bhosle மறைவு – இசை உலகுக்கு பெரும் இழப்பு

Monday, 13 April 2026

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

PI
piragash
in இலங்கை
Sunday, 12 April, 2026 - 04:21 PM 4243 Views

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள். 

சூரியனின் தோற்ற வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (12ஆம் திகதி) நண்பகல் 12.11 அளவில் செட்டிகுளம், கெபித்திகொல்லேவ, கோமரன்கடவல மற்றும் நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

2026 ஏப்ரல் 12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2026 ஏப்ரல் 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்