‘அமைதிக்கான நடைபயணம்’ காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள்
‘அமைதிக்கான நடைபயணம்’ (Walk for Peace) நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை (28) கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு நாளை அதிகாலை 4.00 மணிக்கு கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்ததாவது, நாளை காலை 11.00 மணி முதல் போக்குவரத்து நிலைமையைப் பொறுத்து கொழும்பின் பல முக்கிய வீதிகளில் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும். இதனால் பொதுமக்கள் மாற்று வழித்தடங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ள வீதிகள் வருமாறு:
- பேஸ்லைன் வீதி (பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பொரளை சந்தி வரை)
- மருதானை வீதி
- நந்ததாச கொடகொட மாவத்தை
- வார்ட் பிளேஸ்
- சொய்சா சுற்றுவட்டம்
- லிப்டன் சுற்றுவட்டம்
- தர்மபால மாவத்தை
- எப்.ஆர். சேனநாயக்க மாவத்தை
- சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை
- ஹோர்டன் சுற்றுவட்டம்
- நந்தா மோட்டர்ஸ் பகுதி
- நிதஹஸ் மாவத்தை
- பிரேமசிறி கேமதாச மாவத்தை
- கேம்பிரிட்ஜ் பிளேஸ்
- கிளாஸ் ஹவுஸ் பகுதி
- மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை
- நூலக சந்தி
- ஃப்ளவர் வீதி
- பித்தளை சந்தி
- ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை
- முத்தையா வீதி
- பிரேப்ரூக் வீதி
- ஸ்டேபிள் வீதி
- கங்காராமய ஆலய வீதி
- கங்காராமய ஆலயத்தை அண்மித்த அனைத்து வீதிகளும்
நிகழ்வினால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பொதுமக்கள் முன்கூட்டியே பயணங்களை திட்டமிட்டு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்துக்கள்