தொடருந்து சேவைகள் குறித்து புதிய அறிவிப்பு வெளியீடு! | இலங்கை
முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23, 2026) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு சரியாகத் தொடங்க உள்ளது. ஈரானின் உள்கட்டமைப்புக்கு டிரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் திரும்புகின்றனர். கப்பல்களுடன் நீர்நிலைகளின் மீது பறக்கும் ஹெலிகாப்டர்கள். சுருக்கம் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ

தொடருந்து சேவைகள் குறித்து புதிய அறிவிப்பு வெளியீடு!

KO
Kobika
in இலங்கை
Thursday, 16 April, 2026 - 07:58 AM 115 Views

புத்தாண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு தொடருந்து சேவைகள் இன்று (16.04.2026) வழமைப்போல் நடைபெறும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து திணைக்களத்தின் போக்குவரத்து கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க இன்று (16) முதல் அலுவல தொடருந்து சேவைகள் வழமைக்கும் திரும்பும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இன்று (16) காலை பெலியத்த தொடருந்து நிலையத்திலிருந்து வரும் சாகரிகா 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அதிகாலை 04.15 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு செல்லும் அதேவேளை மாலை வழக்கம் போல் கொழும்பு கோட்டையிலிருந்து தனது பயணத்தைத் ஆரம்பிக்கும்.

அத்தோடு 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் காலை 08.20 மணிக்கு சாகரிகா தொடருந்து பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

ருஹுனு குமாரி மற்றும் காலி குமாரி தொடருந்துகள் வழக்கம் போல் மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். மேலும் காலி தொடருந்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு அதிகாலை 03.15, 04.00, 04.10, 05.00 மற்றும் 05.15 மணிக்கு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் தொடருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல் மஹாகோ கணேவத்த, குருநாகல், ரம்புக்கனை மற்றும் பொல்கஹாவெல ஆகிய இடங்களிலிருந்து அலுவலக தொடருந்துகள் இன்று (16.04.2026) காலை முதல் வழக்கம் போல் இயக்கப்படும்.

சிலாபத்திலிருந்து மேலும் இரண்டு தொடருந்துகளும் அவிசாவெலயிலிருந்து மூன்று தொடருந்துகளும் கொஸ்கமயிலிருந்து ஒரு தொடருந்தும் இன்று கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும்.

காலை அலுவலக ரயில்கள் மாலையில் வழக்கம் போலவே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்