இன்று முதல் 18 ஆம் திகதி வரை பெற்றோலுக்கான QR முறை நீக்கப்படும் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
இலங்கை பொலிஸிற்கு இந்தியாவின் அன்பளிப்பு – 134 கெப் வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை – கியூபா நட்புறவை வலுப்படுத்த கலந்துரையாடல் திருகோணமலையில் 4 எண்ணெய் தாங்கிகள் புனரமைப்பு – 2 தாங்கிகள் பணிகள் நிறைவு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி முல்லைத்தீவில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வானிலை எச்சரிக்கை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை இன்றைய ராசிபலன் @ 19 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை

இன்று முதல் 18 ஆம் திகதி வரை பெற்றோலுக்கான QR முறை நீக்கப்படும்

PI
piragash
in இலங்கை
Sunday, 12 April, 2026 - 04:10 PM 55 Views

இன்று முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு இருந்த QR முறை நீக்கப்பட்டுள்ளது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இந்த வகையில், பெட்ரோலுக்கு மாத்திரமே QR முறை நீக்கப்பட்டள்ளது. அத்துடன், ஒற்றை, இரட்டை முறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். பெட்ரேலுக்கான QR முறையும் நீக்கப்பட்டு, ஒற்றை, இரட்டை முறையும் நீக்கப்படுமிடத்து, முன்பிருந்தது போல் பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் அதிகரிக்க நேரிடும். இதனால் பொதுமக்கள்தான் அசெளகரியங்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த புத்தாண்டு காலத்தில் எரிபொருட்களின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்ட மாட்டாது என்று உறுதியளிப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் , ஒரு லீற்றர் ஒட்டோ டீசலுக்கு 100/- ரூபாயும், ஒரு லீற்றர் ஒக்டேன் 92 வகுதி பெற்றோலுக்கு 20/- ரூபாயும் என்ற வகையில் எரிபொருள் இறக்குமதி விநியோகத்தர்களுக்கு செலுத்துவதன் மூலம் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி, பொது மக்களுக்கு சலுகையினை வழங்கி வருகிறது.

மேலும், எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருட்களின் விலையை பொறுத்தே, எதிர்கால தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்