மன்னார் சவுத்பார் பகுதியில் சுகாதார அச்சம்! மனித உடல் பாகங்கள் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

மன்னார் சவுத்பார் பகுதியில் சுகாதார அச்சம்! மனித உடல் பாகங்கள்

PI
piragash
in இலங்கை
Wednesday, 29 April, 2026 - 07:58 PM 125 Views

மன்னார், ஏப்ரல் 28 – மன்னார் சவுத்பார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில் மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலைமை காரணமாக அப்பகுதியில் கடுமையான சுகாதாரச் சீர்கேடும், பொதுமக்களிடையே அச்சமும் உருவாகியுள்ளது. அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் துர்நாற்றம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, அந்த நிலையத்தின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அதிகாரிகளும் சம்பவத்தை கவனத்தில் கொண்டு மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்