இன்றைய ராசிபலன் @ 19 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
இன்றைய ராசிபலன் @ 19 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத டி20 போட்டியில் டெல்லி வெற்றி ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெய்ஜிங்கில் சொர்க்கக் கோயிலுக்கு சென்ற ஷி ஜின்பிங் – டிரம்ப் சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 மே 2026 தாய்லாந்து அரசியலில் அதிரடி மாற்றம்: சிறையிலிருந்து விடுதலையானார் தக்சிண் ஷினாவத்ரா! இன்றைய ராசிபலன் – மே 10, 2026

இன்றைய ராசிபலன் @ 19 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை

SR
Sri
in இன்றைய ராசிபலன்
Tuesday, 19 May, 2026 - 08:43 PM 40 Views

மேஷம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

கடகம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். புதிய பங்குதாரரின் அறிவுரையை ஏற்று செயல்படவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி சொந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

துலாம்: நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவர். பால்ய நண்பர்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

விருச்சிகம்: தவிர்க்க முடியாத செலவுகள் வரலாம். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர். அலுவலகத்தில் தேவை இல்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

மகரம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும். மனைவி, தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய பங்குதாரர்களின் கருத்துகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

கும்பம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதியுண்டு. அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்