ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகள் 18 வயதுக்குக்கீழ் உள்ளோரைப் பாதுகாக்க! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை -புத்தக விமர்சனம் சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம்: பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள்

ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகள் 18 வயதுக்குக்கீழ் உள்ளோரைப் பாதுகாக்க!

SR
Sri
in உலகம்-ஆசியா
Tuesday, 31 March, 2026 - 07:21 AM 3548 Views

சிங்கப்பூரில்,18 வயதுக்குக்கீழ் உள்ளோர் தகாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தடுக்க ஆப் ஸ்டோர்ஸ் கட்டமைப்புகள் புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்யும்படி தகவல், தொடர்பு மேம்பாட்டு ஆணையம் இதற்குமுன் அறிவித்திருந்தது. திறன்பேசிகளில் உள்ள ஆப் ஸ்டோர்ஸ் (app stores) கட்டமைப்பிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய இனி முக அடையாளச் சோதனை, கடன் அட்டை பயன்பாடு, அரசாங்க அடையாளச் சோதனை ஆகியவற்றைப் பயன்படுத்தவேண்டிய நிலை இருக்கும். சிங்கப்பூரில், ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயதுக்குக்கீழ் உள்ளோர் பாலியல் உள்ளடக்கம் போன்ற தகாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தடுக்க ஆப் ஸ்டோர்ஸ் கட்டமைப்புகள் புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்யும்படி தகவல், தொடர்பு மேம்பாட்டு ஆணையம் இதற்குமுன் அறிவித்திருந்தது. ஆப் ஸ்டோர்ஸ் கட்டமைப்புகள் அரசாங்கம் வழங்கும் அடையாள ஆவணங்களைச் சரிபார்க்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்வோரின் முக அடையாளத்தையும் இணைய பயன்பாட்டுத் தரவுகளையும் சரிபார்க்க முடியும். ஆப்பிள், கூகல், ஹுவாவெய், சாம்சுங், மைக்ரோசாவ்ட் ஆகிய நிறுவனங்களின் ஆப் ஸ்டோர் கட்டமைப்புகளுக்கு அந்தப் புதிய நடைமுறை பொருந்தும். கூகல் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வயதை உறுதிசெய்யும் திட்டங்களை முதலில் அறிமுகம் செய்தது. பயனீட்டாளர்கள் கூகலில் எந்த உள்ளடக்கத்தைத் தேடினார்கள், பார்த்தார்கள் போன்றவற்றை நிறுவனம் இன்னும் ஆராய்வதாகச் சொன்னது. மார்ச் 31ஆம் தேதிக்குள் நிறுவனத்தின் பயனீட்டாளர்களின் வயதை உறுதிப்படுத்தும் திட்டங்கள் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று கூகல் நிறுவனம் குறிப்பிட்டது. கூகல் கணக்கைப் பயன்படுத்தும் 18 வயதுக்குக்கீழ் உள்ளோர் காணொளிகளைப் பார்ப்பதிலிருந்து அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொள்ளும்படி தகவல் அனுப்ப யூடியூப் தளம் முடிவெடுத்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்