எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில்
Monday, 27 April, 2026 - 08:57 PM 141 Views
ஏப்ரல் 27 – நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் தொடர்பான வழக்கை பரிசீலித்த நீதவான், மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், வழக்குடன் தொடர்புடைய மேலதிக தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகள் ஏப்ரல் 29ஆம் தேதி மீண்டும் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள்