மாணவர்களுக்கு அறிவிப்பு: பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத டி20 போட்டியில் டெல்லி வெற்றி ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெய்ஜிங்கில் சொர்க்கக் கோயிலுக்கு சென்ற ஷி ஜின்பிங் – டிரம்ப் சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 மே 2026 தாய்லாந்து அரசியலில் அதிரடி மாற்றம்: சிறையிலிருந்து விடுதலையானார் தக்சிண் ஷினாவத்ரா! இன்றைய ராசிபலன் – மே 10, 2026 ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வாக்குமூலம்!

மாணவர்களுக்கு அறிவிப்பு: பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

KO
Kobika
in இலங்கை
Monday, 20 April, 2026 - 12:40 PM 64 Views

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்காக இன்று ஆரம்பமாகும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை,முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 10 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்