பண்டிகை காலத்தில் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் கோரிக்கை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

பண்டிகை காலத்தில் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் கோரிக்கை

PI
piragash
in இலங்கை
Sunday, 12 April, 2026 - 04:40 PM 5646 Views

பண்டிகைக் காலத்தில் பொறுப்புடன் வாகனங்களை செலுத்தவும் - போக்குவரத்து அமைச்சர் 

பண்டிகை காலத்தில் தம்மை மற்றும் அடுத்தவர்களைப் பாதுகாப்பதற்காக பொறுப்புடன் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

 புது வருட காலத்தில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பது தொடர்பான விசேட உரையாற்றிய அமைச்சர் இதை குறிப்பிட்டார்.  

 இவ்வாறு, வீதி விதிகளை பின்பற்றி மற்றும் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதை விடுத்தும் தவிர்ந்து கொள்வதனால் வீதி விபத்துக்களை குறைக்க முடியும் என அவர் வலியுறுத்தினார். 

 புதுவருட பண்டிகை காலத்தில் கவனக்குறைவு மற்றும் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதனால் ஏற்படும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து போக்குவரத்து அமைச்சரின் விசேட கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 பண்டிகை காலத்தில் பொது மக்களின் போக்குவரத்து அதிகரிப்பதுடன் வாகன நெரிசலும் அதிகரித்தல் மற்றும் சாரதிகளின் கவனியீனமான செயற்பாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்பான ஆபத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றன. 

விசேடமாக குடிபோதையுடன் வாகனத்தை செலுத்துதல், வேகக்கட்டுப் பாட்டை மீறுதல் மற்றும் வீதி விதிகளை கருத்தில் கொள்ளாமை என்பன விபத்துக்களுக்கான பிரதான காரணங்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்..

 இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக மற்றும் விதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் போலீசாரினால் விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனூடாக அவசர அனர்த்தங்கள் தொடர்பாக அறிக்கையிடுவதற்கும், வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்காக மற்றும் கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துதல் குறித்த சாட்சி வீடியோக்களை அனுப்புவதற்கும் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்