சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம்.

SR
Sri
in இலங்கை
Monday, 11 May, 2026 - 02:36 PM 168 Views

மன்னார் கடலோரப் பூங்கா நிர்மாணப் பணிகள்: குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய வடமாகாண சுற்றுலாப் அதிகாரசபை தலைவர்!

மன்னார்:

மன்னார் நகரசபையின் மேற்பார்வையில், மன்னார் நுழைவாயில் பாலத்திற்கு அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடலோரப் பூங்காவின் (Coastal Park) முதற்கட்டப் பணிகளை வடமாகாண சுற்றுலா அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனர்.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதிப் பங்களிப்புடன், மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் இந்தப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இப்பூங்காவின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதனைப் பார்வையிட்ட அதிகாரிகள் கட்டுமானத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அதிகாரிகள் கண்டறிந்த முக்கிய குறைபாடுகள்:

குறிப்பாக, தரைத்தளம் மற்றும் பூங்காவின் அழகுபடுத்தல் பணிகளில் காணப்படும் பலவீனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்ட குழுவினர், அவற்றைச் சீர்செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினர். 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்