தற்போது நிலவும் கடும் வெப்பிலை குறித்து வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் எச்சரிக்கை விடுத்துள்ளது. | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

தற்போது நிலவும் கடும் வெப்பிலை குறித்து வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் எச்சரிக்கை விடுத்துள்ளது.

KO
Kobika
in இலங்கை
Monday, 20 April, 2026 - 08:04 PM 132 Views

தற்போது நிலவும் கடும் வெப்பிலை குறித்து பல மாகாணங்களில் வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, இன்று(20.04.2026) பிற்பகல் 03.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) வரை செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தின் சில பகுதிகளில், மனித உடலில் உணரப்படும் வெப்பம் கவனம் தேவைப்படும் அளவில் நீடிக்கக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில், பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு, மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.  

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்