அமெரிக்காவில் பரபரப்பு: டிரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர் கைது | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

அமெரிக்காவில் பரபரப்பு: டிரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர் கைது

SR
Sri
in உலகம்-அமெரிக்கா
Sunday, 26 April, 2026 - 07:16 PM 133 Views

அமெரிக்காவில் White House Correspondents' Dinner நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில்  அதிபர் Donald Trump கலந்து கொண்டிருந்தார்.

துப்பாக்கி சத்தம் கேட்டவுடன், அங்கு இருந்த ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாக டிரம்பை மேடையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். அவருடன் Stephen Miller உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், டிரம்பின் மனைவி Melania Trump அவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தையும், சம்பவம் தொடங்கியதாகக் கூறப்படும் காட்சிகளையும் டிரம்ப் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், இது தாக்குதல் முயற்சியா அல்லது தனிப்பட்ட சம்பவமா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்