ஆறு மணி நேர எச்சரிக்கை தொடர்ச்சி: கடலில் அமெரிக்காவின் அதிரடி – காணொளி வெளியீடு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

ஆறு மணி நேர எச்சரிக்கை தொடர்ச்சி: கடலில் அமெரிக்காவின் அதிரடி – காணொளி வெளியீடு

KO
Kobika
in உலகம்-அமெரிக்கா
Monday, 20 April, 2026 - 12:33 PM 130 Views

அமெரிக்க கடற்படை, ஓமான் வளைகுடாவில் ஈரான் கொடியுடன் பயணம் செய்த சரக்கு கப்பல் ஒன்றை துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்து, பின்னர் அதில் ஏறி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்தநிலையில், சென்ட்காம் இந்த நடவடிக்கையின் காணொளியையும் பகிர்ந்துள்ளது.

அதில் ஈரானியக் கப்பலான டூஸ்காவை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் அதனை நிறுத்துமாறு எச்சரிப்பதைக் காணலாம்.

ஹோர்மூஸ் கடலிணை அருகே அமெரிக்கா விதித்த தடைக்கு உட்பட்ட நிலையில், இது முதல் முறையாக கப்பல் கைப்பற்றப்பட்ட சம்பவமாகும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட "Touska” எனப்படும் கப்பல் எச்சரிக்கைகளை பின்பற்றாததால் அது கைப்பற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஈரான், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும், “ஆயுதக் கடற்கொள்ளை” என்றும் குற்றம் சாட்டி, விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

மேலும், இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாவது சுற்று சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுத்துள்ளது.

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்