அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்பட்டவர் 16 நாட்களுக்குப் பிறகு உயிருடன் திரும்பிய அதிர்ச்சி சம்பவம் – பாகிஸ்தானில் நடந்தது என்ன? | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்பட்டவர் 16 நாட்களுக்குப் பிறகு உயிருடன் திரும்பிய அதிர்ச்சி சம்பவம் – பாகிஸ்தானில் நடந்தது என்ன?

KO
Kobika
in உலகம்-ஏனைய நாடுகள்
Monday, 20 April, 2026 - 01:07 PM 135 Views

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மார்தான் மாவட்டத்தில் உள்ள பளிங்குக் கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காயமடைந்து மீட்கப்பட்டனர். ஒருவர் காணாமல் போனதால் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

நீண்ட தேடுதல் பணிக்குப் பிறகு, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த காணாமல் போன தொழிலாளி அப்துல் வஹாப் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால், அவர் காணாமல் போன தகவல் கிடைத்திருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை இறந்ததாக எண்ணி, தவறாக மற்றொரு சடலத்தை அடக்கம் செய்திருந்தனர்.

16 நாட்களுக்கு பிறகு அப்துல் வஹாப் உயிருடன் இருப்பது உறுதியாகியதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்வுக்கு உள்ளானார்கள். இந்த சம்பவம் விபத்து பின்னணியில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் மீட்புப் பணியின் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்