கொழும்பு ஆடை கடையில் பணியாளர்கள் செய்த அதிர்ச்சி சம்பவம் | இலங்கை
முக்கிய செய்திகள்
ஈரானின் உள்கட்டமைப்புக்கு டிரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் திரும்புகின்றனர். கப்பல்களுடன் நீர்நிலைகளின் மீது பறக்கும் ஹெலிகாப்டர்கள். சுருக்கம் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ

கொழும்பு ஆடை கடையில் பணியாளர்கள் செய்த அதிர்ச்சி சம்பவம்

KO
Kobika
in இலங்கை
Wednesday, 22 April, 2026 - 12:49 PM 11 Views

கொழும்பு, புறக்கோட்டை செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து பணம் மற்றும் ஆடைகள் திருடப்பட்டுள்ளன.

இதனை திருடிய குற்றச்சாட்டில், அந்த விற்பனை நிலையத்தின் முகாமையாளர், 3 விற்பனை உதவியாளர்கள் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த முதலாம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தமது விற்பனை நிலையத்திலிருந்து 32 லட்சம் ரூபாய் பணமும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபா பெறுமதியான ஆடைகளும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.  அந்த முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சந்தேகத்திற்கிடமான முகாமையாளர் உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் குறித்த விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 62 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் ஆடைகளைத் திருடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட 32 லட்சம் ரூபாய் பணத்தை முகாமையாளரின் மட்டக்குளிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டனர்.

 

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்