தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

TN
TNT Admin
in இலங்கை
Tuesday, 24 March, 2026 - 07:14 AM 85 Views

தலவாக்கலை ராணிவத்தை வீதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகள் உரிய தூரம் வரை சேவையில் ஈடுபடுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று(23) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் போராட்டகாரர்கள் ராணிவத்தை பகுதியிலிருந்து சுமார் 3 கிலோ மீற்றருக்கும் தூரம் எதிர்ப்பு ஊர்வலமாக சென்று கோசங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை காட்சிபடுத்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பு போராட்டம் தலவாக்கலையிலிருந்து ராணிவத்தை தோட்டத்திற்கு கடந்த காலங்களில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் ராணிவத்தை வரை சென்றுளள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் வீதிக்கு மண் போடப்பட்டமையினால் பேருந்துகள் செல்வது கடினமானதாக அமைந்ததாகவும் அந்த கால்பகுதியிலிருந்து பம்பரகலை வரை மாத்திரம்பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளது. தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் இப்போது வீதி புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த வீதியூடான போக்குவரத்து பம்பரகலை தொழிற்சாலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் சின்ன ராணிவத்தை, பெரிய ராணிவத்தை, மெல்டன் ஆகிய தோட்டங்களில் உள்ள மக்கள் தமது அன்றாட தேவையினை நிறைவேற்றிக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பம்பரகலை தொழிற்சாலைக்கு அருகாமையில் நிறுத்தப்படும் பேருந்தினை ராணிவத்தை வரை சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்