இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

PI
Piragash
in இலங்கை
Saturday, 23 May, 2026 - 09:30 PM 62 Views

இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக Department of Meteorology Sri Lanka தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, பருவமழை காலத்தில் பலத்த காற்று, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்களும் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும், அவசர தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்