சென்னை சுழலில் மும்பை இந்தியன்ஸ் தடுமாறியது | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

சென்னை சுழலில் மும்பை இந்தியன்ஸ் தடுமாறியது

KO
Kobika
in விளையாட்டு
Friday, 24 April, 2026 - 01:56 AM 71 Views

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் 33ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மும்பையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சஞ்சு சம்சன் 101 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 208 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன் அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும், நூர் அஹமட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

குறித்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பிட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்