அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற பெரிய திட்டம் என மகிந்த ராஜபக்சா வெளிப்படுத்திய கருத்து | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற பெரிய திட்டம் என மகிந்த ராஜபக்சா வெளிப்படுத்திய கருத்து

KO
Kobika
in இலங்கை
Monday, 20 April, 2026 - 01:25 PM 93 Views

இந்த புதிய ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாரிய திட்டமொன்று இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியலில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும், அந்த மாற்றங்களுக்கு முகம் கொடுக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தின் பணிகள் இன்று (20.04.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, புத்தாண்டு பிறந்திருந்தாலும் கூட மக்கள் இம்முறை புத்தாண்டை முறையாகக் கொண்டாடவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, அரசியல் மாற்றங்களை இலக்காகக் கொண்டு புதிய ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்