ஐபில் 2026: ராஜஸ்தானை தோற்கடித்து கொல்கத்தாவின் முதல் வெற்றி | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

ஐபில் 2026: ராஜஸ்தானை தோற்கடித்து கொல்கத்தாவின் முதல் வெற்றி

KO
Kobika
in விளையாட்டு
Monday, 20 April, 2026 - 12:51 PM 86 Views

நடந்துவரும் 2026 ஐபிஎல் சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் (19.04.2026) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின.

நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணித்தலைவர் ரியான் பராக் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடியது.

வைபவ் சூர்யவன்ஷி 46 ஓட்டங்களும் , ஜெய்ஸ்வால் 39ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் பின்னர் ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி , கார்த்திக் தியாகி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து 156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி இறுதியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்