ஐபிஎல் 2026: தமிழக கிரிக்கெட் ஜாம்பவான் மறைவையொட்டி சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

ஐபிஎல் 2026: தமிழக கிரிக்கெட் ஜாம்பவான் மறைவையொட்டி சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

KO
Kobika
in விளையாட்டு
Tuesday, 14 April, 2026 - 11:03 PM 108 Views

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சி.டி. கோபிநாத் சமீபத்தில் காலமானார். அவர் அப்போதைய மெட்ராஸ் அணியில் இடம் பெற்று ஆடியவர். 

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதிய போட்டி தொடங்கிய போது இரு அணி வீரர்களும் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்து களம் இறங்கினர். 

1951 முதல் 1960 வரை இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோபிநாத், 1952-ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் முக்கிய பங்கு வகித்தவர்.

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்