2026 மகளிர் செஸ் தொடரில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை வைஷாலி; உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

2026 மகளிர் செஸ் தொடரில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை வைஷாலி; உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி

KO
Kobika
in விளையாட்டு
Thursday, 16 April, 2026 - 12:14 AM 130 Views

சைப்ரஸ் நாட்டின் நிகோசியா நகரில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான சர்வதேச செஸ் கூட்டமைப்பின் மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் மகளிர் கேண்டிடேட்ஸ் தொடரில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இவர் புதன்கிழமை நடைபெற்ற இறுதி சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் அனுபவ வீராங்கனியான கேடரினா லக்னோவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் தகுதியை வைஷாலி பெற்றுள்ளார். அங்கு அவர் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனை எதிர்கொள்ள உள்ளார். உலக சாம்பியன் பட்டத்திற்கான இந்த சவால் இந்திய செஸ் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்