சூயஸ் கால்வாயைக் கடந்த பிரான்சின் சார்லஸ் டி கோல் போர்க்கப்பல் குழுமம்
Wednesday, 06 May, 2026 - 10:55 PM 112 Views
பிரான்சின் “சார்லஸ் டி கோல்” விமானம் தாங்கி போர்க்கப்பல் குழுமம் புதன்கிழமை சூயஸ் கால்வாயைக் கடந்து தெற்கு செங்கடல் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பிரெஞ்சு ஆயுதப்படைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நகர்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் குழுமத்தில் போர்விமானங்கள், பாதுகாப்பு கப்பல்கள் மற்றும் ஆதரவு கப்பல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு மற்றும் செங்கடல் கடற்பரப்பில் நிலவும் பதற்றநிலையை முன்னிட்டு, பல நாடுகள் தங்களது கடற்படை நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்துக்கள்