ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வாக்குமூலம்!
இலங்கை திறைசேரி அதிகாரி ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி விவகாரத்தை முதன்முதலில் வெளிக்கொணர்ந்த அதிகாரியாகக் கருதப்படும் ரங்க ராஜபக்ச அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
இந்த மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து முக்கிய தகவல்கள் இருப்பதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரங்க ராஜபக்ச மரணம் குறித்து தற்போது பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தற்கொலையா? இயற்கை மரணமா? திட்டமிட்ட கொலையா?
என்பது தொடர்பில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டின் அரசியல் மற்றும் நிதித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்துக்கள்