இலங்கையில் : பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட அம்பர் எச்சரிக்கை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
குவாண்டம் கம்பியூட்டிங் – கணினி உலகின் அடுத்த புரட்சி ஆன்மாவின் பயணம்: கற்பனையா? அறிவியல் சாத்தியமா? பேச்சு தாமதம் – பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை – ஒப்பிடாதீர்கள் மைக்ரோபிளாஸ்டிக்: நம் வாழ்க்கையில் மறைந்து இருக்கும் ஆபத்து வரலாற்றில் இன்று – மே 3 இன்றைய (மே 3, 2026) 12 ராசிகளுக்கான ராசிபலன் டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

இலங்கையில் : பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட அம்பர் எச்சரிக்கை

PI
piragash
in இலங்கை
Friday, 03 April, 2026 - 11:55 PM 3886 Views

இலங்கையில் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

அதன்படி இன்று (3.04.2025) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை நடைமுறையினல் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக பலத்த காற்று

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 'ஆம்பர்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, ​​குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அது மேலும் தெரிவித்தது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்