தமிழகத்தில் இன்று தேர்தல்: இலங்கையிலும் உயரும் எதிர்பார்ப்பு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

தமிழகத்தில் இன்று தேர்தல்: இலங்கையிலும் உயரும் எதிர்பார்ப்பு

KO
Kobika
in தமிழ்நாடு
Thursday, 23 April, 2026 - 08:13 AM 164 Views

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு இன்று(23.04.2026) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி தமிழகத்திலுள்ள மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனா்.

இதில், 14 இலட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக உள்ளனர்.

மாநிலம் முழுவதும் 75,064 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தமிழக பேரவைத் தோ்தலில் திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் திகதி கடந்த மாா்ச் 15இல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை(ஏப். 20) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்