நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின்சார நுகர்வோரிடமிருந்து அறவிட வேண்டாம் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின்சார நுகர்வோரிடமிருந்து அறவிட வேண்டாம்

PI
piragash
in இலங்கை
Sunday, 12 April, 2026 - 04:31 PM 3246 Views

மின்சார கட்டணத் திருத்தங்களின் போது, நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின்சார நுகர்வோரிடமிருந்து அறவிட வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

மின்சார உற்பத்தி, மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே மின்சார கட்டணத் திருத்த முன்மொழிவுகளில் கருத்தில் கொள்ளப்படுகின்றன என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது. கடந்த மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தில், நிலக்கரி காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவுகள் அங்கீகரிக்கப்படவில்லை. எதிர்காலக் மின்சார கட்டணத் திருத்த முன்மொழிவுகளில், நிலக்கரி தொடர்பாக காரணமாக எழக்கூடிய மேலதிக செலவுகள் அல்லது பிற நியாயமற்ற செலவுகளை மின்சாரக் கட்டணங்களில் சேர்க்க வேண்டாம் என்று ஆணைக்குழு ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்