2027ஆம் ஆண்டு முதல் கல்வி அமைப்பில் மாற்றம்: புதிய அறிவிப்பு வெளியீடு! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

2027ஆம் ஆண்டு முதல் கல்வி அமைப்பில் மாற்றம்: புதிய அறிவிப்பு வெளியீடு!

KO
Kobika
in இலங்கை
Friday, 17 April, 2026 - 09:16 AM 84 Views

கல்வி சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிகாட்டுதல் குழுவின் நியமனத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய அமைச்சர்கள், துறைசார் வல்லுநர்கள், அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த தேசிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட உள்ளது.

2019-ல் தொடங்கப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தச்செயல்முறை, தற்போதைய அரசாங்க கொள்கைகளுக்கு இணங்க, 2026ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஆறாம் வகுப்பிற்கான கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன .இதன்படி, கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான தொடர்ச்சியான செயல்முறையை செயல்படுத்துவதற்கும், அச்செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கும், துறைசார் வல்லுநர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழுவை நியமிக்க வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்