மத்திய வங்கியின் புதிய நடவடிக்கை: 142 மில்லியன் பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்து வெளியேற்றம் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

மத்திய வங்கியின் புதிய நடவடிக்கை: 142 மில்லியன் பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்து வெளியேற்றம்

KO
Kobika
in இலங்கை
Wednesday, 22 April, 2026 - 06:16 PM 85 Views

கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 142 மில்லியன் பணத் தாள்களை புழக்கத்தில் இருந்து மத்திய வங்கி நீக்கியுள்ளது.

இவ்வாறு நீக்கப்பட்ட 141.55 மில்லியன் பணத் தாள்களின் மொத்த மதிப்பு 91.23 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற, சிதைந்த மற்றும்அழுக்கடைந்த   பணத்தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகளைத் தொடர்ந்து புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

அவற்றுக்கு பதிலாக புதிய பணத்தை விநியோகிக்கும் முறையான பணியை மத்திய வங்கி மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, கள்ள பணத்தாள்களின் புழக்கத்தைத் தடுக்கும் நோக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நோட்டுக்கள் பிரிவுடன் இணைந்து மத்திய வங்கி செயற்பட்டு வருகிறது.

கடந்தாண்டில் போலி நாணயத்தாள்களை நீதிமன்றத்தில் ஆதாரங்களாக சமர்ப்பிப்பதற்கான 83 சான்றிதழ்களை மத்திய வங்கி வழங்கியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்