மிக அதிக வேகத்தில் ரன் சேர்த்த ஆயுஷ் மத்ரே | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

மிக அதிக வேகத்தில் ரன் சேர்த்த ஆயுஷ் மத்ரே

KO
Kobika
in விளையாட்டு
Tuesday, 14 April, 2026 - 11:19 PM 107 Views

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த போட்டியில் தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பேட் மூலம் அவர் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். 

ஆயுஷ் மத்ரேவின் இந்த ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பின்னணியில் ஒரு கசப்பான சம்பவம் உள்ளது. இதற்கு முந்தைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக சென்னை விளையாடிய போது, ஆயுஷ் மத்ரே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்திருந்தார். இருப்பினும், கடைசி ஓவர்களில் ரன் குவிக்க அவர் சற்று திணறினார். இதனால் அதிருப்தி அடைந்த சிஎஸ்கே பயிற்சியாளர்கள், அவரை 'ரிட்டையர் அவுட்' முறையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். பாதி ஆட்டத்திலேயே வெளியேற்றப்பட்டதால் ஆயுஷ் மத்ரே பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
 

இதற்கு அடுத்த போட்டியிலேயே கொல்கத்தா அணிக்கு எதிராக  வெறும் 17 பந்துகளை எதிர்கொண்ட ஆயுஷ் மத்ரே 38 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். இவரது ஸ்டிரைக் ரேட் 223 ஆக இருந்தது. இந்த இளம் வீரரின் துணிச்சலான ஆட்டம் சென்னை ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்