கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்!

PI
Piragash
in இலங்கை
Thursday, 07 May, 2026 - 09:47 PM 133 Views

வியட்நாம் ஜனாதிபதி Tô Lâm அவர்களின் உத்தியோகபூர்வ Cவிஜயத்தை முன்னிட்டு, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனாதிபதியின் பயணத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக பல முக்கிய வீதிகளில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுலாகும் பகுதிகள்:

▪️ கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை
▪️ கிராண்ட்பாஸ்
▪️ ஒருகொடவத்த
▪️ பேச்லைன் வீதி
▪️ பொரளை
▪️ ஹார்டன் பிளேஸ்
▪️ லிபர்டி சுற்றுவட்டம்
▪️ காலி வீதி
▪️ காலி முகத்திடல்
▪️ லோட்டஸ் வீதி
▪️ யோர்க் வீதி உள்ளிட்ட பகுதிகள்

மேலும், ஜனாதிபதியின் பயண நேரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

VIP வாகன அணிவகுப்பு நகரும் நேரங்களில் மற்ற வாகனங்களுக்கும் தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வியட்நாம் ஜனாதிபதி Tô Lâm அவர்கள் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன், பல உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, போக்குவரத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்